சென்சேஷன் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம்.. ஹீரோ ஹீரோயின் இவர்களா

By Kathick Nov 21, 2022 06:00 AM GMT
Report

மாரி செல்வராஜ்

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதன்பின் தனுஷை வைத்து கர்ணன் எனும் படத்தை இயக்கினார்.

இந்த இரண்டு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக மாமன்னன் எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில், வடிவேலு என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

சென்சேஷன் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம்.. ஹீரோ ஹீரோயின் இவர்களா | Mari Selvaraj Directional Next Movie

மாமன்னனுக்கு பிறகு மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படத்திற்கு முன் மற்றொரு புதிய படத்தை இயக்கவுள்ளாராம்.

அடுத்த புதிய படம்

ஹாட்ஸ்டார் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்திற்கு வாழை என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ஹாட்ஸ்டார் தயாரிப்பு என்பதினால் இப்படம் ஓடிடி என பலரும் நினைக்கக்கூடும். ஆனால், இப்படம் ஓடிடிக்கு கிடையாது. நேரடியாக திரையரங்கில் வெளியிட தான் ஹாட்ஸ்டார் திட்டமிட்டு தயாரிக்கின்றனர். 

சென்சேஷன் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம்.. ஹீரோ ஹீரோயின் இவர்களா | Mari Selvaraj Directional Next Movie


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US