விஜய்க்கு கதை சொன்ன சென்சேஷன் இயக்குனர்.. விஜய் இப்படியொரு வார்த்தையை கூறினாரா
விஜய்
தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் தான் வெளிவந்தது.

நடிகர் விஜய்யிடம் இதுவரை பல முன்னணி இயக்குனர்கள் கதை கூறியுள்ளனர். அந்த வரிசையில் பிரபல சென்சேஷன் இயக்குனர் மாரி செல்வராஜ் விஜய்யை சந்தித்து கதை கூறினாராம்.
கதை கூரிய மாரி செல்வராஜ்
அரசியல் கலந்த சமூக நீதி பேசக்கூடிய தன்னுடைய படத்தின் கதையை விஜய்யிடம் மாரி கூறியுள்ளார். படத்தின் கதையை கேட்டவுடன் ஷாக்கான விஜய் மாரி செல்வராஜை பார்த்து 'என்ன சார்' என கேட்டாராம்.
விஜய் கண்டிப்பாக அந்த கதையில் நடிக்க மாட்டார் என்றும், ஆனால், கண்டிப்பாக விஜய் சாரை வைத்து நான் படம் பண்ணுவேன் என்றும் மாரி செல்வராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும், தனது சிறு வயதில் இருந்து மாரி செல்வராஜ் தளபதி விஜய்யின் ரசிகராக தான் வளந்தாராம். விஜய்யுடைய எந்த படமாக இருந்தாலும், முதல் நாள் முதல் காட்சி திரையரங்கில் பார்க்கலாம் இருக்க மாட்டாராம்.
இயக்குனர் ஆன பின் தான் நேரம் கிடைக்கவில்லை அதனால் முதல் நாள் படம் பார்க்க முடியவில்லை என மாரி செல்வராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் IBC Tamilnadu