மாரிமுத்துவின் நிறைவேறாத ஆசைகள்.. இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தால் நடந்திருக்கும்
மாரிமுத்து மறைவு
மாரடைப்பு காரணமாக கடந்த 8ஆம் தேதி மரணமடைந்தார் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து. இவருடைய மறைவு அனைவரும் பாதித்தது.
இயக்குனராக வேண்டும் என நினைந்து சினிமாவிற்கு வந்த மாரிமுத்து இரு படங்கள் மட்டுமே இயக்கிய நிலையில், நடிப்பில் வாய்ப்புகள் வந்ததன் காரணமாக தொடர்ந்து பல படங்களில் நடிக்க துவங்கினார்.

கமலின் விக்ரம், ரஜினியின் ஜெயிலர் என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் கூட நடித்துள்ளார். மேலும் இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை எதிர்நீச்சல் சீரியல் பெற்று தந்தது.
ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த மாரிமுத்து தன்னை தவிர வேறு யாரும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்ற அளவிற்கு தனது முத்திரையை பதித்துள்ளார்.
நிறைவேறாத ஆசைகள்
தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த மாரிமுத்துவிற்கு மலையாளம், தெலுங்கு முக்கியமாக பாலிவுட் திரையுலகில் நடிக்க வேண்டும் என ஆசை இருந்ததாம்.

இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தால் கண்டிப்பாக மாரிமுத்து பாலிவுட்டில் நடித்திருப்பார். ஆனால், அதற்குள் இப்படி நடந்துவிட்டது என அவருடைய நண்பரும், நடிகருமான ஜீவா ரவி பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri