25 வருட தனது மனைவியின் ஆசையை இறப்பதற்கு முன் நிறைவேற்றியுள்ள நடிகர் மாரிமுத்து- புகைப்படத்துடன் இதோ
மாரிமுத்து
நடிகர் மாரிமுத்து பல வருடத்திற்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இவருக்கான ஒரு இடம் கிடைத்ததே இல்லை, இப்போது தான் மாரிமுத்து என்ற பெயர் அதிகம் சினிமாவில் பேசப்பட்டது.
ஆனால் அதற்குள் அவரது வாழ்க்கையே முடிந்தது பலருக்கு சோகம் தான். காலை டப்பிங் பேசிக் கொண்டிருந்த அவருக்கு சில மணி நேரங்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.
இப்போது தான் அவருக்கான ரீச் கிடைத்தது, அதை அனுபவிப்பதற்கு முன்பே நடிகரின் உயிர் பிரிந்துவிட்டது. இன்று காலை முதல் தமிழ் திரையுலகம் மாரிமுத்து மரண செய்தி கேட்டு கடும் சோகத்தில் உள்ளனர்.

மனைவியின் ஆசை
மாரிமுத்து மனைவி பெயர் பாக்கியலட்சுமி, இவர்களுக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகியும் மனைவியின் ஆசையை நிறைவேற்றாமல் இருந்துள்ளார்.
அதாவது அவருக்கு கணவர் கையால் மல்லிப்பூ வாங்கி வைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அதனை அண்மையில் ஒரு பேட்டியின் போது மாரிமுத்து திடீரென செய்ய அவரது மனைவி மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.
மாரிமுத்து மனைவிக்கு பூ வைக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu