மருதநாயகம் படத்தில் இருந்து எடுத்து விக்ரம் படத்தில் பயன்படுத்தப்பட்ட விஷயம்.. வேற லெவல் மாஸ்
கமலின் விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் விக்ரம்.
இப்படம் இன்று வரை உலகளவில் சுமார் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் இடம்பெற்ற முக்கிய காட்சிகளில் ஒன்று கிளைமாக்ஸில் வரும் பீரங்கி காட்சி. இந்த காட்சியின்போது திரையரங்கம் அதிர்ந்தது.
இந்நிலையில், இந்த பீரங்கி இதற்குமுன் கமல் ஹாசன் இயக்கி, நடத்த மருதநாயகம் படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றுள்ளது.
விக்ரம்

ஆம், மருதநாயகம் படத்தில் கமல் ஹாசன் பயன்படுத்திய அதே பீரங்கியை தான், தற்போது விக்ரம் படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளார்.
மருதநாயகம்

இந்த தகவல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.