சூர்யவம்சம் பட வாய்ப்பை இழந்த மாஸ்டர் மகேந்திரன்.. அந்த வாய் தான் காரணம்: பிரபல நடிகர்
நாட்டாமை படத்தில் குழந்தையாக நடித்து பிரபலம் ஆனவர் மாஸ்டர் மகேந்திரன். அவர் அதற்கு பிறகு ஏராளமான படங்களில் குழந்தையாக நடித்து இருந்தார்.
தற்போது அவர் வளர்ந்துவிட்ட பிறகு பல படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தில் சின்ன வயது பவானி ரோலில் அவர் நடித்து இருந்தார்.

சூர்யவம்சம் பட வாய்ப்பு
சூர்யவம்சம் படத்தில் சரத்குமார் - தேவயானி மகன் ரோலில் நடிக்க முதலில் மாஸ்டர் மகேந்திரனை தான் அழைத்து வந்தார்களாம்.
ஆனால் வந்ததும் 'எத்தனை ஷாட் எடுப்பீங்க, என்ன டைலாக், கேமரா ஆங்கிள் எல்லாம் எப்படி வைப்பீங்க..’ இப்படி பல கேள்விகள் கேட்டாராம்.
அதனால் கோபமான இயக்குநர் விக்ரமன் அவர் வேண்டாம் என அனுப்பிவிட்டாராம். அதன் பின் தான் ஹேமலதா என்ற பெண் குழந்தைக்கு கெட்டப் போட்டு பையனாக நடிக்க வைத்தார் அவர்.
இந்த விஷயத்தை நடிகர் பாவா லக்ஷ்மணன் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.