ஒவ்வொரு காட்சியையும் காப்பியடித்த லோகேஷ் கனகராஜ்.. ரசிகர்களிடம் சிக்கிய விஜய்யின் சூப்பர்ஹிட் படம்
மாஸ்டர்
லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் இதுவரை லியோ மற்றும் மாஸ்டர் என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இதில் முதல் முறையாக விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் கைகோர்த்த படம் தான் மாஸ்டர்.
துணை இயக்குனருடன் ஷங்கர் மகள் திருமணம்.. மகிழ்ச்சியுடன் கூறிய அதிதி ஷங்கர், மாப்பிள்ளையின் புகைப்படம் இதோ..
இப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதுவும் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
மாஸ்டர் படம் காப்பியா
மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வெற்றிபெற்ற இப்படம் பிரபல மலையாள படத்தின் காப்பி என கூறி ரசிகர்கள் வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகிறார்கள். மம்மூட்டி நடிப்பில் கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த படம் முத்ரா.
இப்படத்தில் இடம்பெறும் காட்சிகளை போலவே, மாஸ்டர் படத்திலும் காட்சிகள் அமைந்துள்ளது என கூறி, மாஸ்டர் படத்தை இப்படத்திலிருந்து தான் காப்பியடித்து எடுத்துள்ளனர் என வைரல் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Mudra(1989-Malayalam)⭐ing Mammootty,Written By Lohithadas & Directed By SibiMalayil & Master(2021-Tamil)⭐ing Vijay & Written & Directed By LokeshKanagaraj
— Akshay (@Arp_2255) February 18, 2024
Dey Loki ? Main plot of both films is almost same & many of the scenes are scene by scene copypic.twitter.com/xX0CbjXxFA