மே மாதம் OTT -யில் வெளிவரும் படங்கள்.. லிஸ்ட் இதோ
இந்த மே மாதம் OTT-யில் என்னென்ன திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வெளிவருகிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
குட் பேட் அக்லி
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்கில் மாபெரும் வசூல் வேட்டையாடியுள்ளது. இதுவரை ரூ. 283 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், வருகிற மே 8ம் தேதி இப்படம் OTT-யில் வெளிவரும் என தகவல் தெரிவிக்கின்றனர்.
கேங்கர்ஸ்
சுந்தர் சி இயக்கி நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் கேங்கர்ஸ். இப்படத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் இம்மாதம் OTT-யில் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
மே 2ம் தேதி இன்று வருணன் படம் ஆஹா OTT-யிலும் மற்றும் EMI என்கிற படம் அமேசான் பிரைம் OTT-யிலும் வெளிவந்துள்ளது. லாஸ்ட் புல்லட் மே 7ம் தேதி வெளியாகிறது. Love Death + Robots சீசன் 4 மே 15ம் தேதி அங்கு வெளியாகும். சைரன்ஸ் மே 22ம் தேதியும், fear street: prom queen மே 23ம் தேதி வெளிவரும்.
மேலும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் மாதம் வெளிவரும் சிக்கந்தர் படம் மே 30 அன்று நெட்ப்ளிக்ஸ் OTT-யில் வெளிவரும். மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளிவந்த துடரும் படமும் இம்மாதம் வெளிவரும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
