தமிழ் சினிமாவின் மூன்று டாப் நடிகர்களுடன் நடித்த மாயா.. யார் என்று நீங்களே பாருங்க
மாயா
பிக் பாஸ் 7ல் கலந்துகொண்ட போட்டியாளர்களின் ஒருவர் தாம் மாயா. இவர் முதலில் இந்த போட்டியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், சமீபகாலமாக ரசிகர்களிடம் இருந்து வெறுப்பை சம்மதித்து இருக்கிறார்.
இவர் செய்யும் விஷயங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பது தான் பொதுவான கருத்தாக இருக்கிறது. இனி வரும் நாட்களிலாவது அதை மாற்றிக்கொண்டு மீண்டும் பழையபடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம். சரி பிக் பாஸ் ஒரு பக்கம் இருக்கட்டும், மாயாவின் சினிமா பயணம் குறித்து பேசுவோம்.
டாப் நடிகர்களுடன் மாயா
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன் மற்றும் தளபதி விஜய் என மூன்று பேருடனும் இணைந்து மாயா நடித்துள்ளார். ஆம், சங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 2.0 படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படத்தின் துவக்க காட்சியில் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ரஜினியை சந்திக்க வரும் காட்சியில் தான் மாயா நடித்துள்ளார். மேலும் கமல் ஹாசனுடன் விக்ரம் படத்தில் நடித்தது குறித்து சொல்லி தான் தெரியவந்ததும் என்று இல்லை.
அதே போல் லியோ படத்தில் LCU-வில் இருந்து ஒரு சிறிய கதாபாத்திரமாக என்ட்ரி கொடுத்து விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். இதன்மூலம் ரஜினி, கமல், விஜய் என மூன்று தமிழ் சினிமா டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.