சிம்பிளாக நடந்து முடிந்து நடிகை மீனா மகள் நைனிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்- யார் வந்தது பாருங்க
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
இப்போதும் நடிகை மீனா தனக்கு வரும் நல்ல கதைகளில் திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார், கடைசியாக மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 படம் நடித்திருந்தார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
கடந்த வருடம் மீனாவிற்கு ஒரு சோகமான வருடமாக அமைந்தது, காரணம் அவரது கணவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கணவரின் உயிரிழப்பு தாக்கத்தில் இருந்து வெளியே வந்து இப்போது படங்கள் நடித்த தொடங்கி இருக்கிறார் மீனா.
நடிகை மீனாவின் மகள் நைனிகாவிற்கு ஜனவரி 1 பிறந்தநாள் வந்துள்ளது, ஸ்பெஷல் வீடியோக்களை மீனா வெளியிட்டிருந்தார். தற்போது நடன இயக்குனர் கலா மாஸ்டருட்ன் மீனாவின் மகள் நைனிகா தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
துணிவில் அஜித்தின் பெயர் இதுதான், இதை கவனித்தீர்களா