இது நடந்திருந்தால் கணவர் உயிரை காப்பாற்றி இருப்பேன்: மீனா உருக்கம்

By Parthiban.A Aug 13, 2022 01:10 PM GMT
Report

நடிகை மீனா தனது கணவர் மரணம் பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார். மேலும் அவர் உறுப்பு தானம் செய்வதாகவும் கூறி இருக்கிறார்.

மீனா கணவர் மரணம்

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் 27 ஜூன் 2022 அன்று மரணம் அடைந்தார். அவர் கடந்த பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மரணமடைந்தார்.

அவரது இறுதி சடங்குகளை மீனா தான் செய்தார். ரஜினி, கமல் உட்பட சினிமா நட்சத்திரங்கள் அதிகம் பேர் இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.

இது நடந்திருந்தால் கணவர் உயிரை காப்பாற்றி இருப்பேன்: மீனா உருக்கம் | Meena Pledges For Organ Donation

இது நடந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம்

வித்யாசாகருக்கு உறுப்புகள் தானம் செய்ய donors கிடைத்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என தற்போது மீனா தெரிவித்து இருக்கிறார்.

"அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும். ஒருவர் உறுப்பு தானம் செய்தால் 8 உயிர்களை காப்பாற்ற முடியும்."

"அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நான் தற்போது organ donation செய்கிறேன்" என மீனா தெரிவித்து இருக்கிறார்.  

சிறு வயதில் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்த ஜான்வி கபூர்.. இதோ

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US