கணவர் மரணம் பற்றி தவறான தகவல் பரப்பாதீங்க! வேண்டுகோள் விடுத்த நடிகை மீனா

By Jeeva Jul 01, 2022 01:14 PM GMT
Report

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மீனா, இவரின் கணவர் வித்யாசாகரின் திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மீனாவிற்கும் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் ஆனது, இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் உள்ளார்.

48 வயதான வித்யாசாகர் நீண்ட நாட்களாக உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அவரின் உடல்நிலை மோசமடைத்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி மரணமடைந்தார்.

இந்நிலையில் தனது கணவரின் மறைவுக்கு பின் நடிகை மீனா இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “என் கணவர் வித்யாசாகர் இழப்பால் மிகவும் மனமுடைந்துள்ளேன். பத்திரிக்கை நண்பர்கள் அனைவரும் எங்கள் சூழ்நிலையை புரிந்துக்கொண்டு எங்களுடைய தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளியுங்கள்.

இனியும் இது குறித்து எந்தஒரு தவறான செய்தியையும் ஒளிப்பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்த கடினமான சூழலில் எங்களுக்கு உறுதுனையாக இருந்த நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும், சிறப்பான மருத்துவச் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், தமிழக முதல்வருக்கும், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்-க்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

 

தளபதி 67 படத்தில் லோகேஷுடன் இணைந்த பிரபலம்! யார் தெரியுமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US