மீரா மிதுன் கடத்தப்பட்டாரா? தாய் கொடுத்த அதிர்ச்சி புகார்
நடிகை மீரா மிதுன் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருக்கிறார். அவர் தன்னை தானே சூப்பர் மாடல் என கூறிக்கொண்ட நிலையில் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பும் வந்தது.
தலைமறைவு
சமூக வலைத்தளங்களில் எப்போதும் சர்ச்சையாக பதிவிட்டு வந்த மீரா மிதுன் ஒரு வீடியோவில் பட்டியலினத்தவர்கள் பற்றி மோசமாக பேசி இருந்த வீடியோ வைரலான நிலையில் அவர் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதானார்.
அதன் பின் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியில் வந்த அவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதனால் அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார், தேடி வருகிறோம் என போலீசார் கூறி இருந்தனர்.
தாய் புகார்
மீரா மிதுன் செல்போனையும் ஆஃப் செய்து வைத்திருப்பதால் அவரது இடத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்திருக்கிறது என போலீசார் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தற்போது மீரா மிதுனின் அம்மா போலீசில் ஒரு புகார் அளித்து இருக்கிறார். மீரா மிதுனை காணவில்லை, அவரை கண்டுபிடித்து தரும்படி அவர் கேட்டிருக்கிறார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ரஜினியின் இளைய மகள் கட்டும் புதிய வீடு! பூஜையில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார்