பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் உலகளவில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
Hiphop Tamizha Meesaya Murukku 2 worldwide collection: ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து, இயக்கி, இசையமைத்து உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் மீசைய முறுக்கு 2. பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும் இப்படம் உலகளவில் 4 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மீசைய முறுக்கு
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இவர் இயக்கி, நடித்து கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மீசைய முறுக்கு. தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை அவர் எடுத்திருந்தார். இப்படம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.

மீசைய முறுக்கு 2
இப்படத்தின் முதல் பாகத்திற்கு பிறகு மீசைய முறுக்கு 2 திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அதற்கான ஐடியா எதுவும் இல்லாததால் எடுக்கவில்லை என ஆதி கூறியிருந்தார். ஆனால், கானா பாடல்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக, கானா பாடகர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஆதி இயக்கி, ஹீரோவாக நடித்து, இசையமைத்த திரைப்படம்தான் மீசைய முறுக்கு 2.

அமோக வரவேற்பு
இப்படத்தில் கருணாஸ், ரம்யா ரங்கநாதன், நாசர், ஹர்ஷத் கான், கெத்திகா ஷர்மா, சைத்ரா அச்சர், பாபா பாஸ்கர் என பல நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்துள்ளனர். கலகலப்பாகவும், கானா பாடகர்களின் வலியையும் பேசிய மீசைய முறுக்கு 2 திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல் விவரம்
ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும், அதனுடைய வசூல் குறித்த விவரங்களை நாம் தொடர்ந்து பார்ப்போம். அந்த வகையில், கடந்த வாரம் திரைக்கு வந்த மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 32 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
