The Meg 2: The Trench திரை விமர்சனம்
ஹாலிவுட் படங்கள் என்றாலே பிரமாண்டம் தான். சாதரண சுறா மீனை காட்டினாலே அவ்வளவு பிரமாண்டமாக இருக்கும், இதில் 3 திமிங்கலம் போல் இருக்கும் சுறாவை காட்டினால் சொல்லவா வேண்டும், அந்த வகையில் மெக் படத்தின் சீக்குவல் மெக் 2 இன்று வெளிவர, படம் எப்படி என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்தில் ஒரு (ஜேசன் சாட்தம்) குழு, கடலுக்கடியில் பல புதிய உயிரினங்களை கடுப்புடிக்க செல்கிறது. சுமார் 20 ஆயிரம் அடிக்கு கீழ சென்று பார்த்தான், அங்கு வேறு ஒரு குழு அங்கிருந்து சில தாதுப்பொருட்களை எடுக்கிறது.
அதோடு ஹீரோவின் குழுவை தாக்கி விட்டு செல்ல, வேறு வழியின்று கடலுக்குள் இறங்கி, ட்ரன்ச் என்ற வழித்தடுத்தின் வழியே ஒரு ஸ்டேஷன் நோக்கி நடக்கின்றனர்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் 3 மெக், ஒரு மெகா சைச் ஆக்டோபஸ் இவர்களை தாக்க, பிறகு என்ன இதிலிருந்து இவர்கள் தப்பித்து, தாதுப்பொருட்களை திருடும் கும்பலை பிடித்தார்களா என்பது தான் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் ஆரம்பிக்க, முதல் பாகத்தில் வந்த சீனா ஹீரோயின் இதில் இறந்தது போலவும், அவருடைய மகளை ஜேசன் காப்பாற்றி வருவது போலவும் காட்டுகின்றனர்.
சரி அதெல்லாம் எதுக்கு படத்துல ஆக்ஷன் எப்படி சிஜி ஒர்க் எப்படி என்று நீங்கள் கேட்பது புரிகிறது. படத்தின் மெக் சம்மந்தப்பட்ட காட்சிகள் கடைசி அரை மணி நேரம் தான் அதகளம். அதுவரை அங்கும் இங்கும் தான் வந்து செல்கிறது.
ஆனால், அதை விட சர்ப்ரைஸாக இவர்கள் கடலுக்கடியில் நடந்து செல்லும் காட்சி பதட்டத்தை நம்மிடம் கடத்துகிறது. அப்படி ஒரு மிரட்டல், அதுவும் பெரிய சைஸ் பள்ளி போல் வரும் உயிரினம் அட்டகாசம், இப்படி குழந்தைகளுக்கு பிடித்த காட்சிகள் நிறையவுள்ளது.
ஆனால், படத்தில் தெரியாமல் கூட லாஜிக் எதிர்ப்பார்க்காதிற்கள், 60 அடி சுறா வாயை காலை வைத்தே ஹீரோ முட்டு கொடுப்பார், தண்ணீரை தாண்டி சுறா மீன் மீது கூட வாட்டர் போட்டில் ஸ்விம்மிங் போடுவார், 5 மணி நேரம் இருக்க சொன்னால் கூட தண்ணிரூக்குள் அகுவாமேன் போல் ஸ்வீம் செய்வார் என பல லாஜிக் எல்லை மீறல்கள் கொட்டி கிடக்கிறது.
சிஜி காட்சிகள் தண்ணீருக்குள் பெரிதாக குறை இல்லை என்றாலும், தண்ணீருக்கு வெளியே அப்பட்டமாக தெரிகிறது. முதல் பாகம் அளவிற்கு ஒரு தெளிவு இல்லை.
மொத்தத்தில் இந்த மெக் 2 ஜாலியாக பேமிலியுடன் பார்க்கலாம், Oppenheimer, interstellar போன்ற படங்களை பார்த்து அதிக நாலேஜ் உள்ள ஆங்கிலப்பட ரசிகர்கள் என்றால் அரவே தவிர்த்து விடுவது நல்லது.
அனிருத் கூறிய ஜெயிலர் படத்தின் முதல் விமர்சனம்.. படம் நல்லா இருக்கா? இல்லையா?