ரஜினி படத்தின் பிரம்மாண்ட வசூல்.. பார்த்து பயந்த எம்ஜிஆர்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று உச்ச நட்சத்திரமாக கலக்கிக்கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக கூலி திரைப்படம் வெளிவரவுள்ளது.
மேலும் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். பாக்ஸ் ஆபிஸ் கிங் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் இதுவரை பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவருடைய வசூல் பலரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
தயாரிப்பாளர் வெளிப்படை பேச்சு
இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளர் முக்தா ரவி, பேட்டி ஒன்றில் ரஜினி படத்தின் வசூலை பார்த்து எம்ஜிஆர் அவர்கள் பயந்ததாக கூறியுள்ளார். இதில், 1908ல் முரட்டுக்காளை படம் வெளிவந்த நேரத்தில், அப்படத்தின் வசூல் பல சாதனைகளை படைத்தது.
அந்த சமயத்திலேயே 300 ரூபாய் வரை டிக்கெட்க்கு விலை வைத்து விற்றனர். அப்போது படத்தின் வசூலை வாங்கி பார்த்த நடிகர் எம்ஜிஆர் 'இப்படியெல்லாம் நான் பாத்ததே இல்லை, இவர் இப்படி பின்றாரே' என கூறினாராம்.
தனது தந்தையிடம் எம்ஜிஆர் பேசிய இந்த விஷயத்தை தயாரிப்பாளர் முக்தா ரவி அந்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.