என் மனைவி டாக்டர், 5 வருட காதல், போராடி திருமணம்.. நடிகர் மைம் கோபியின் காதல் கதை
மைம் கோபி
பல தமிழ் படங்களில் நெகடிவ் ரோல்களில் நடித்து மிரட்டியவர் மைம் கோபி. பல ஹாரர் படங்களையும் அவரை பார்த்திருக்கலாம்.
அவர் தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவ்வப்போது அவர் அந்த ஷோவில் தனது மைம் நடிப்பு திறமையையும் செய்து காட்டி பாராட்டை பெற்று வருகிறார்.
மனைவி டாக்டர்.. காதல் திருமணம்
தற்போது அவரது மனைவி ஒரு டாக்டர் என கூறி இருக்கிறார். "அவர் ஒரு டாக்டர். MD Community medicine படித்திருக்கிறார். அவர் அமெரிக்காவில் படித்தவர். ஆனால் நான் NGO பணிகள் அதிகம் செய்வேன். அதை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி என்னை காதலித்தார்."
"எங்கள் காதலுக்கு அவர் வீட்டில் ஒப்புதல் கிடைக்கவில்லை. எதிர்த்து திருமணம் செய்ய விருப்பம் இல்லை. அதனால் 5 வருடம் காத்திருந்து தான் திருமணம் செய்து கொண்டோம்" என மைம் கோபி கூறி இருக்கிறார்.
நடிகர் பார்த்திபனின் மொத்த சொத்து மதிப்பு விவரம்! எவ்ளோ தெரியுமா?