விஜய் டிவியை விட்டு வெளியேறிய மிர்ச்சி செந்தில்! அடுத்த சீரியல் அறிவிப்பு
செந்தில்
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் அதன் இரண்டாம் சீசன் என தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தவர் மிர்ச்சி செந்தில்.
NINI 2 தொடர் முடிந்தபிறகு அவர் எந்த புது சீரியலிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது அவரது அடுத்த தொடர் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜீ தமிழில் புது சீரியல்
தற்போது மிர்ச்சி செந்தில் ஜீ தமிழில் ஒரு புது சீரியலில் கமிட் ஆகி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நித்யா ராமா நடிக்க போகிறாராம்.
செந்தில் தங்கையாக பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ரித்திகா நடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 'அண்ணா' என இந்த தொடருக்கு பெயரிடப்பட்டு இருப்பதாக கூறப்படுவதால், அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி தான் கதை இருக்கும் என தெரிகிறது.
பாக்யாவுக்கு இரண்டாம் கல்யாணமா.. உச்சகட்ட ஷாக் ஆன கோபி! - Baakiyalakshmi-ல் இன்று

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
