Mission Chapter 1 திரை விமர்சனம் இயக்குனர்
மிஷின் சாப்டர் 1
விஜய் பல வருடமாக ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என போராடி வந்த நிலையில், பல வருடம் போராடி ஹிட் கொடுத்த அருண் விஜய்யுடன் கூட்டணி அமைத்த படமே இந்த மிஷின் சாப்டர் 1, இந்த கூட்டணி வெற்றி பெற்றதா பார்ப்போம்.
கதைக்களம்
அருண் விஜய் தன் மகள் ஆப்ரேஷன் ஒன்றிற்காக தன் வேலையை விட்டு, அவலா மூலம் பணத்தை எடுத்துக்கொண்டு லண்டன் செல்கிறார். அங்கு ஒரு மருத்துவமனையில் அருண் விஜய் வைத்திருக்கும் அவாலா பணத்திற்கு ஆசைப்பட்டு ஒருவர் திருட முயற்சிக்கிறார். அப்படி முயற்சிக்கும் போது அடிதடியில் அருண் விஜய் தவறுதலாக போலிஸை அடிக்க, லண்டனில் உள்ள ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார்.
அதே சிறையில் 3 தீவிராவதிகளை தப்பிக்க வைக்க, வில்லன் முயற்சி செய்ய, அந்த திட்டத்தை அருண் விஜய், எமி ஜாக்ஸன் அண்ட் கோ எப்படி முறியடிக்கிறார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
அருண் விஜய் தமிழ் சினிமாவின் மிக கம்பீரமான கதாநாயகன் என்று கூட சொல்லலாம், இவர் 100 பேரை அடித்தால் கூட இவர் அடிப்பார்டா என்று சொல்ல வைத்து விடுவார் போல.
தன் மகளை குணப்படுத்த வேண்டும் என்ற பரிதவிப்பு, பின் தீவிரவாதிகளை தப்பிக்க விட கூடாது என்ற ஆக்ரோஷம் என சிக்ஸர் அடித்துள்ளார்.
படத்தின் மிகப்பெரிய பலம் சண்டைக்காட்சி தான், அதிலும் ஜெயிலுக்குள் கைதிகள் அனைவரும் வெளியே தப்பிக்க முயற்சி செய்ய, அதை தடுக்க அருண் விஜய் போடும் சண்டை காட்சி மிரட்டல்.
எமி ஜாக்சன் தன் பங்கிற்கு ஆக்ஷனில் ஆங்கங்கே தலை காட்டுகிறார். ஆனால், இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இஸ்லாமிய தீவிரவாதிகள் கான்செப்ட் எடுப்பார்களோ என்று தான் உள்ளது.
அதே நேரத்தில் படத்தில் ஒரு சில காட்சிகள் அப்படியே விஸ்வரூபத்தையும் நியாபகப்படுத்துவது தவிர்க்க முடியவில்லை. அதோடு வில்லன் பெயர் கூட விஸ்வரூபம் வில்லன் பெயர் தான், அவரையும் எல்லோரும் உமர் பாய் என்றே அழைக்கின்றனர்.
டெக்னிக்கலாம் மிகவும் பலமாக உள்ளது, குறிப்பாக அந்த ஜெயில் சண்டைக்காட்சியில் வரும் ஏரியல் ஷாட் ரசிக்க கைக்கிறது. இசை ஓகே ரகம் தான்.
க்ளாப்ஸ்
அருண் விஜய் மிரட்டலான நடிப்பு.
சண்டைக்காட்சிகள்.
பல்ப்ஸ்
பின்னணி இசை
ஃபர்ஸ்ட் ஆப்பிள் சற்று தொய்வு இருக்கிறது.
மொத்தத்தில் அருண் விஜய்யின் ஆக்ஷன் அதகளம் தான் இந்த மிஷின் சாப்டர் 1- சக்சஸ்
Ratings - 3/5