Mission: Impossible – Dead Reckoning Part One திரை விமர்சனம்
ஹாலிவுட் திரையுலகில் ஜேம்ஸ் பாண்ட் வகை படங்களுக்கு பஞ்சமே இருக்காது. உலகம் முழுவதும் ஜேம்ஸ் பாண்ட் தான் சிறந்த ஸ்பை என கொண்டாட, டாம் க்ரூஸ் நான் ஒரு ஸ்பை உலகத்தை உருவாக்குகிறேன் என Mission: Impossible என்ற சீரிஸை உருவாக்கினார், டாம் க்ரூஸை பல நேரங்களில் காப்பாற்றிய இந்த சீரியஸின் கடைசி பாகத்தின் முதல் பார்ட் ஆக வெளிவந்துள்ள Mission: Impossible – Dead Reckoning Part One எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு சப் மெரீன் அட்டாக் நடக்கின்றது, அந்த அட்டாக்கை செய்தது யார் என்று விசாரித்தால் திடுக்கிடும் தகவலாக ஒரு AI அந்த வேலையை பார்த்துள்ளது.
அந்த AI யாருடைய கைக்கு செல்கிறதோ அவர்கள் தான் இந்த உலகத்தையே ஆள்வார்கள் என்ற நிலை உருவாகிறது, இதனால் உலகின் பல நாடுகள் இதற்காக போட்டி போடுகிறது.
இரண்டு பாகங்களாக இருக்கும் சாவி, அதை சேர்த்து அந்த AI யை அழிக்க Ethan Hunt (டாம் க்ரூஸ்) முயற்சிக்கின்றார். அந்த முயற்சியில் Ethan Hunt வெற்றி பெற்றார என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
படத்தின் மொத்த பலமும் சண்டைக்காட்சிகள் என்றால், அதை தன் உள்ளங்கையில் தாங்கி ஒவ்வொரு ஸ்டெண்ட் காட்சிகளிலும் அதிரிபுதிரி செய்துள்ளார் டாம் க்ரூஸ், இவருக்கு 61 வயது என்றால் யாரால் தான் நம்ப முடியும்.
படத்தின் ஆரம்பத்திலேயே ரோம் நகரில் வரும் சண்டைக்காட்சி, பைக், கார் என்று பின்னி பெடல் தான், அதே நேரத்தில் வெறும் சண்டைக்காட்சி மட்டுமே வைத்து படத்தை ஓட்டாமல், கதைக்கும் மிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
ஒரு AI தான் உலகயே ஆளப்போகிறது என்பதை வார்த்தையில் மட்டும் சொல்லாமல், எதிர்காலைத்தை கூட துள்ளியமாக அந்த AI கணிக்கும் என்பதை காட்சிக்கு காட்சி மிரட்டியுள்ளனர்.
பரபரப்பான காட்சி என்றால் வெறும் சண்டை மட்டுமில்லை, ஒரு காட்சியாக கூட இருக்கலாம் என்று படத்தின் ஆரம்பத்தில் ஏர்போட்டில் சாவியை கைப்பற்ற ஒவ்வொருவரும் செய்யும் வேலை, இன்னும் சில நிமிடங்களில் வெடிக்க போகும் பாஃம், அதை ஆப் செய்ய ஒருவர் என அந்த சீக்குவன்ஸே பரபரப்பின் உச்சம்.
இவை அனைத்திற்கும் மேலாக கிளைமேக்ஸ் ட்ரெயின் சண்டைக்காட்சி, ஒரு நொடி நாமே அந்த ட்ரெயினில் பதட்டத்துடன் இருந்த அனுபவம்.
இத்தனை சண்டைக்காட்சிகளுக்கும் ஈடுக்கொடுத்து விளையாடி இருக்கின்றது Fraser Taggart ஒளிப்பதிவு, மிஸின் இம்பாசிபள் என்றாலே அந்த தீம் மியூஸிக் தானே, அதையும் கட்சிதமாக எங்கெங்கு வேண்டுமோ அங்கெல்லாம் வைத்து அசத்தியுள்ளனர்.
படத்தின் கிளைமேக்ஸில் செகண்ட் பார்ட்டிற்கு கொடுத்த லீட் ரசிக்க வைக்கின்றது. கண்டிப்பாக அடுத்த பாகத்தில் கடலுக்கு அடியில் ஒரு பரபரப்பான சண்டைக்காட்சிக்கு பஞ்சம் இருக்காது.
இவ்வளவு சிறப்புகள் இருந்தும், இந்த படம் தமிழ் டப்பிங்கில் பார்த்தாலுமே அனைவருக்கும் அவர்கள் பேசும் டெக்னிக்கல் விஷயங்கள் புரியுமா என்றால் கேள்விக்குறி தான்.
பல இடங்களில் கதை நகர்கின்றது, என்ன இப்போது தானே இங்கு இருந்தார்கள், இவர்களை தான் உலக போலிஸே தேடுது, ஆனால் ஜாலியாக வேறு நாட்டிற்கு வந்துவிடுகிறார்களே போன்ற லாஜிக் ஓட்டைகளும் அதிகம், நீளம் சில இடங்களில் தெரிகின்றது.
மொத்தத்தில் டாம் க்ரூஸின் அதிரடி சாகசங்களுக்கு மேலும் ஒரு உச்சமாக அமைந்துள்ளது இந்த Mission: Impossible – Dead Reckoning Part One.
தெலுங்கில் மட்டுமே லியோ இத்தனை கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதா..! வேற லெவல் மாஸ் காட்டும் விஜய்