உடல்நல குறைவால் மரணமடைந்த அஜித்தின் தந்தைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்..
அஜித் தந்தை மரணம்
இன்று காலை நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார்.
85 வயதாகும் இவர் கடந்த சில வருடங்களாகவே உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருடைய மறைவுக்கு திரையுலக சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தார்கள்.

இதை தொடர்ந்து நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அஜித்தின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஸ்டாலின் இரங்கள்
மேலும் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஜித்தின் தந்தையின் மறைவுக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது " அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் மரணமடைந்த செய்தியை கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமாருக்கு என்னயுடைய இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் " என கூறியுள்ளார்.
நடிகர் அஜித்தின் தந்தை மரணம்.. சோகத்தில் குடும்பம்
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri
வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது: திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து IBC Tamilnadu