பிரம்மாண்டமாக நடக்கப்போகும் அமரன் வெற்றிவிழா.. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா
அமரன்
சமீபத்திய சென்சேஷனல் ஹிட் அமரன் படத்தின் வெற்றிவிழா குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.
முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் - இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் அமரன். இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்தது.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்திருந்தார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையகமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. உணர்வுபூர்வமான திரைக்கதையில் அமைந்திருந்த அமரன், உலகளவில் இதுவரை ரூ. 314 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
வெற்றிவிழா
மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ள அமரன் படத்திற்காக படக்குழு வெற்றிவிழா கொண்டாடவுள்ளனர். இதில் சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். அவர் தான் அனைவரும் கேடயம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமரன் படத்தின் முதன் முதலில் பார்த்துவிட்டு, படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னதும் முதல்வர் ஸ்டாலின் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
