Mona 2 திரை விமர்சனம்
ஹாலிவுட்டில் அனிமேஷன் படங்களுக்கு என மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் இருக்க, மோனா படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளிவந்துள்ளது, முதல் பாகத்தை போல் கவர்ந்ததா பார்ப்போம்.
கதைக்களம்
மோனா அதிரடி சாகசங்கள் செய்யும் ஒரு பெண், இவர்கள் கிராமத்தில் ஒரு நாள் திருவிழாவின் போது ஒரு மின்னல் மோனாவின் மீது விழுந்து அவரின் முன்னோர்கள் கண்களுக்கு தெரிகிறார்.
இதில் மோனா நீ கடலுக்கு அந்தப்பக்கம் உள்ள மோட்டுபிட்டு-வை கண்டுப்பிடிக்க வேண்டும், அப்படி கண்டுப்பிடித்து மக்களை இணைக்க வேண்டும் என்று சொல்கின்றனர்.
அதை தொடர்ந்து மோனா மோட்டுபிட்டு-வை கண்டிப்பிடிக்க கிளம்பும் அதிரடி சாகசங்களே இந்த மோன 2.
படத்தை பற்றிய அலசல்
மோனா பல சாகசங்கள் செய்து குட்டி குட்டி ரசிகர், ரசிகைகளை கொண்டவர், அவரின் சாகசங்களை காணவே பலரும் படத்திற்கு வருகின்றனர்.
அதே போல் இதிலும் ஒரு சாகசத்தை நோக்கி தான் செல்கின்றனர், அதிலும் இவரும் Moui இரண்டு பேரும் இணைந்தால் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது.
ஆனால், இதில் பஞ்சம் இருக்கிறது தான், ஏனெனில் பெரிய அளவிற்கு இதில் சாகச காட்சிகள் இல்லை, Moui கதாபாத்திரம் வந்த பிறகு தான் படம் கொஞ்சம் சூடுபிடிக்கிறது.
அதிலும் ராட்சஸ திமிங்கலம் ஒன்றின் வயிற்றில் சென்று Moui கண்டிப்பிடிக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது, அதோடு நாலா என்ற அரக்கனை தேடி செல்ல அதில் பெரிய சுவாரஸ்யம், திருப்புமுனை ஏதுமில்லாமல் செல்கிறது.
வழக்கம் போல் அனிமேஷன் காட்சி பிரமிக்ல வைக்கிறது, படமே பாடல்கள் வைத்து தான் நகர்கிறது, அதனால் இசை கலக்கியுள்ளனர்.
க்ளாப்ஸ்
மோனாவின் நண்பர்களாக வரும் கதாபாத்திரம் ஒன் லைன் காமெடி ரசிக்க வைக்கிறது.
டெக்னிக்கல் ஒர்க்
கிளைமேக்ஸ் சாகச காட்சிகள்
பல்ப்ஸ்
சுவாரஸ்யம் எதுமில்லாமல் செல்லும் திரைக்கதை.
3D பார்ப்பதை தவிர்க்கலாம்.
மொத்தத்தில் சுவாரஸ்யம், திரைக்கதை எல்லாம் பெரியவர்களுக்கு தானே, குழந்தைகள் கொண்டாடும் படமாக தான் வந்துள்ளது மோனா 2.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
