500 கோடி வந்த பிறகும் இப்படி ஒரு மார்க்கெட்டிங்.. பார்த்து கத்துக்கோங்க: பிரபல இயக்குனர்
12 நாட்களில் 540 கோடி வசூலித்து விஜய்யின் லியோ படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. படம் 600 கோடியை விரைவில் நெருங்கும் என்றும் கூறப்டுகிறது.
மேலும் லியோ படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் பொய்யாக கூட இருக்கலாம் என இயக்குனர் லோகேஷ் கூறிய நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் நீக்கப்பட்ட காட்சியில் மன்சூர் பேசிய வசனத்தை வெளியிட்டு இருந்தனர்.

500 கோடி வந்த பிறகும் மார்க்கெட்டிங்
மன்சூர் பேசும் வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் பிரபல இயக்குனர் மோகன்.ஜி தற்போது ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
'ஒரு தமிழ் படத்திற்கு இது மிகப்பெரிய மார்க்கெட்டிங் strategy. 500 கோடி வந்த பிறகும் புது கான்செப்டில் ப்ரோமோஷன் செய்கிறார்கள். ஒவ்வொரு படக்குழுவும் இதை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும்' என மோகன் ஜி பதிவிட்டு இருக்கிறார்.
Biggest marketing strategy of an Tamil film ever.. Even though 500 CR collected the team had new new concepts to market the movie.. This is sheer brilliance.. Every Movie team should learn from this team about marketing ??? https://t.co/yHTTwcVma2
— Mohan G Kshatriyan (@mohandreamer) October 31, 2023