தனி ஒருவன் மோகன் ராஜாவுடன் இணைகிறாரா விஜய்.. வெறித்தனமான திரைக்கதை ரெடி

By Kathick Aug 15, 2023 03:40 AM GMT
Report

மோகன் ராஜா - விஜய்

வேலாயுதம் படத்தின் மூலம் இணைந்த கூட்டணி தான் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் தளபதி விஜய். இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணையவில்லை.

ஆனால், ரசிகர்கள் இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

தனி ஒருவன் மோகன் ராஜாவுடன் இணைகிறாரா விஜய்.. வெறித்தனமான திரைக்கதை ரெடி | Mohan Raja Vijay Movie Update

இந்நிலையில் அதற்கான முயற்சி நடந்ததாம். ஒரு முறை விஜய்யை சந்தித்து இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க திரில்லர் கலந்த கதை ஒன்றை மோகன் ராஜா கூறியுள்ளாராம்.

இணையவிருந்த கூட்டணி 

அந்த சமயத்தில் தான் அருண் விஜய்யின் தடம் திரைப்படம் வெளிவந்துள்ளது. அந்த படத்தின் கதையும், விஜய்க்காக மோகன் ராஜா கூறிய கதையும் ஒரே சாயலில் இருப்பதன் காரணமாக மோகன் ராஜா விஜய்க்கு கூறிய கதையை எடுக்க முடியாமல் போய்விட்டதாம்.

தனி ஒருவன் மோகன் ராஜாவுடன் இணைகிறாரா விஜய்.. வெறித்தனமான திரைக்கதை ரெடி | Mohan Raja Vijay Movie Update

ஆனால், தற்போது அந்த கதையை இன்னும் வெறித்தமாக மாற்றி அமைத்துள்ளாராம் மோகன் ராஜா. அது மட்டுமின்றி இன்னும் இரண்டு சூப்பர் கதைகளை கூட விஜய்க்காக தயார் செய்து வைத்துள்ளார். கண்டிப்பாக இந்த கூட்டணி விரைவில் அமையும் என எதிர்பார்ப்பதாக மோகன் ராஜா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

11 வயது வித்தியாசமுள்ள நடிகனுக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்.. யார் அந்த நடிகர் தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US