ரீமேக் பட இயக்குனர் என்ற பெயரை தனி ஒருவனாக மாற்றிய மோகன் ராஜா சொத்து மதிப்பு... எவ்வளவு தெரியுமா?
மோகன் ராஜா
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகளாக களமிறங்கி சாதித்தவர்கள் பலர் உள்ளார்கள்.

அப்படி பிரபல எடிட்டர் மோகன் அவர்களின் மகன் என்ற அடையாளத்தோடு இயக்குனர் அவதாரம் எடுத்தவர் மோகன் ராஜா. சரத்குமார் நடித்த தென்காசிப்பட்டினம் படத்தை தெலுங்கில் ஹனுமன் ஜங்க்ஷன் என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தார்.
2003ம் ஆண்டு ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார், தனது தம்பி ரவியை ஹீரோவாக அறிமுகம் செய்தார்.
அதன்பின் தொடர்ந்து மோகன் ராஜா ரீமேக் படங்களாக இயக்க அவருக்கு ரீமேக் பட இயக்குனர் என்ற பெயர் வந்தது. அந்த பெயரை உடைக்க மோகன் ராஜா தனி ஒருவன் படத்தின் மூலம் மாற்றினார்.
இப்போது அவரின் இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சொத்து மதிப்பு
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் வெற்றி இயக்குனராக வலம் வரும் மோகன் ராஜா நேற்று (மே 30) தனது 49வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
சாதனை செய்துவரும் இயக்குனர் மோகன் ராஜாவின் சொத்து மதிப்பு ரூ. 40 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri