வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த மோகன் லால்.. இத்தனை கோடி நிதி கொடுத்தாரா!!
நிலச்சரிவு
கேரளாவில் கொட்டி தீர்த்த கனமழையால், வயநாடு மாவட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கி 340 உயிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்னும் 250 பேர் காணவில்லை என்பதால் மீட்பு படையினர் களத்தில் இறங்கி மண்ணில் புதைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர்.

நிதி
சினிமா பிரபலங்களும் வயநாடு மக்களுக்காக நிதி உதவி அளித்து வருகின்றனர். சிலர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரளா சினிமாவில் சூப்பர்ஸ்டார் மோகன்லால், கௌரவ கர்னலாக இருக்கும் சூழலில், ராணுவ சீருடையிலே வயநாடு மக்களை சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் ரூ 3 கோடி நிதி உதவி கொடுத்துள்ளார்.