ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்த டாப் ஹீரோ.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
ஜெயிலர்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ சில வாரங்களுக்கு முன் வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இப்படத்தில் மலையாள திரையுலகின் டாப் நடிகரான மோகன்லால் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் இதை உறுதிசெய்யவில்லை.
இந்நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆம், நடிகர் மோகன்லால் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனால், ரஜினி ரசிகர்களும், மோகன்லால் ரசிகர்கள் செம குஷி ஆகியுள்ளார்.
Lalettan @mohanlal from the sets of #Jailer ?@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/wifqNLPyKf
— Sun Pictures (@sunpictures) January 8, 2023
வாரிசு முதல் விமர்சனம் - படம் எப்படி இருக்கு தெரியுமா