வாரிசு முதல் விமர்சனம் - படம் எப்படி இருக்கு தெரியுமா
வாரிசு
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வருகிற 11ம் தேதி வெளியாகிறது. வம்சி இயக்கியுள்ள இப்படத்தின் ப்ரீ புக்கிங் நேற்றில் இருந்து துவங்கியுள்ளது.
இந்நிலையில், வாரிசு படத்தை சென்சாரில் பார்த்த நபர் படத்தின் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
விமர்சனம்
அதன்படி, வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் நடிப்பு மிரட்டுகிறது. எமோஷனில் சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் கதை ஒன்றும் புதிதல்ல, ஆனாலும் விறுவிறுப்பாக திரைக்கதை நகர்கிறது. கதாநாயகை ராஷ்மிகா மந்தனா திரையில் அழகாக தெரிகிறார்.
ரசிகர்கள் நல்ல விருந்து தான் வாரிசு படத்தின் ஒளிப்பதிவு. தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றியும், தாய்க்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றியும் எடுத்துக்காட்டியுள்ளார். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அற்புதமாக இருக்கிறது.
படத்தின் முதல் பாதியை இன்னும் குறைத்து இருக்கலாம். அது படத்திற்கு சற்று குறையாக அமைய வாய்ப்பு. துணை நடிகர், நடிகைகள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். மொத்தத்தில் பைசா வசூல் தான் இந்த வாரிசு.. என கூறி 3.5/5 ரேட்டிங் கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய்க்கும் நடிகை தமன்னாவிற்கும் இந்த ஆண்டு திருமணம்.. சர்ச்சைக்கு பின் இந்த முடிவா

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
