ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார்! எதிர்பார்க்காத பிரம்மாண்ட கூட்டணி
ஜெயிலர்
சூப்பர்ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என முன்பே அறிவிப்பு வந்தது.
படத்தை முடித்து ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு கொண்டாட்டமான தகவல் வெளியாகி இருக்கிறது.
மோகன்லால்
தற்போது மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது. இதுவும் கெஸ்ட் ரோல் தான் என கூறப்படுகிறது.
இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி மலையாள ரசிகர்களையும் கொண்டாட வைத்திருக்கிறது. வரும் 8ம் தேதி நடக்கும் ஷூட்டிங்கில் மோகன்லாலை கலந்துகொள்ள இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
வாரிசு லைக்ஸ் எல்லாம் பொய்யா...இந்த வேலை வேற நடக்கிறதா