மார்க்கெட் சென்று மீன்பாடி வண்டியுடன் பிரபல நடிகை எடுத்த போட்டோ ஷுட்- அதற்காக தான் செய்தாரா?
மோனிஷா
சிறுவயதில் இருந்தே விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மோனிஷா.
இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.
அந்நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.
அதன்பிறகு அவருக்கு பெரிய அளவில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
போட்டோ ஷுட்
வித்தியாசமான போட்டோ ஷுட்களை நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டு அதன்மூலம் சுமார் 8 லட்சம் ரசிகர்களை பெற்றுள்ளார்.
அதிகப்படியான ரசிகர்களை பெற மோனிஷா நிறைய வித்தியாசமான போட்டோ ஷுட்களை நடத்தி வருகிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜை அசிங்கப்படுத்தினாலும் படப்பிடிப்பில் அனைவரும் செய்த செயல்- வைரலாகும் போட்டோ
அண்மையில் இவர் மார்க்கெட்டில் பழக்கடைகள் அருகே மீன்பாடி வண்டியில் போல் கொடுத்து எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் பாலோவர்கள் கிடைப்பதற்காக எப்படி எல்லாம் போட்டோ எடுக்கிறார்கள் என கலவையான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.