ரஜினி, ஷாருக், பிரபாஸ் இல்லை.. கடந்த 10 ஆண்டுகளில் அதிகம் தேடப்பட்ட நடிகர் இவர்தான்
இந்திய சினிமா நடிகர்கள் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் என்பதை அவர்களின் படங்களுக்கு வரும் வசூல் மற்றும் இணையத்தில் அவர்களை எத்தனை பேர் தேடினார்கள் என்பதை வைத்து தான் முடிவெடுக்க முடியும்.
அந்த வகையில் தற்போது IMDb நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் லிஸ்ட் வெளியிட்டு இருக்கிறது.
தீபிகா படுகோன்.. டாப்
சல்மான் கான், ஷாருக் கான், பிரபாஸ், விஜய் என நாட்டின் முன்னணி நடிகர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி தீபிகா படுகோன் தான் இந்த லிஸ்டில் முதலிடம் பிடித்திருக்கிறார்.
இந்த லிஸ்டில் சமந்தா 13ம் இடத்திலும், தமன்னா 16ம் இடத்திலும், நயன்தாரா 18வது இடத்திலும் இருக்கின்றனர். பிரபாஸ் 29ம் இடம் மற்றும் தனுஷ் 30ம் இடம் பிடித்து இருக்கின்றனர்.
மற்ற தமிழ் நடிகர்கள் பெயர் இந்த லிஸ்டில் இல்லை.
