66 வயதில் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் நடிகர் மொட்டை ராஜேந்திரன்! என்ன சாப்பிடுகிறார் தெரியுமா
நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஸ்டண்ட் நடிகராக இருந்து அதன் பின் காமெடியனாக மாறி தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர்.
அவர் வசனம் பேசும் விதம், பாடி லாங்குவேஜ் என எல்லாமே ரசிகர்களை சிரிக்க வைக்கும். அவர் ஸ்டண்ட் மேனாக இருந்தபோது ஒரு காட்சியில் நடித்தபோது ஒரு ஏரியின் தண்ணீரில் குதிக்க சொல்லி இருக்கிறார்கள், அதில் குதித்த பிறகு தான் அது ஆலையில் இருந்து வந்த கெமிக்கல் கலந்த தண்ணீர் என்பது.
அதனால் தான் முடி எல்லாம் கொட்டி மொட்டை ராஜேந்திரனாக அவர் மாறி இருக்கிறார்.

சிக்ஸ் பேக்
66 வயதாகும் மொட்டை ராஜேந்திரன் தற்போதும் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். உடலை இப்படி வைத்திருக்க என தான் சாப்பிடுகிறீர்கள் என கேட்டதற்கு.
வீட்டில் என்ன செய்தாலும் சாப்பிடுவேன், தயிர்சாதத்துடன் ஊறுகாய் வைத்து சாப்பிட்டால் கூட எனக்கு போதும்.
நான் ஜிம் போகமாட்டேன், எப்போதும் இந்திய முறைப்படி தான் உடற்பயிற்சி செய்வேன். அதனால் உணவு பற்றி கவலைப்படுவதில்லை என மொட்டை ராஜேந்திரன் கூறி இருக்கிறார்.
