ஸ்ருதியிடம் வசமாக சிக்கிய மல்லிகா... மௌன ராகம் 2 தொடரில் அடுத்து நடக்கப்போகும் அதிரடி
விஜய் தொலைக்காட்சியில் சிறுமிகளை வைத்து எடுக்கப்பட்ட ஒரு தொடர் மௌன ராகம். முதல் பாகம் அந்த சின்ன குழந்தைகளை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்தது.
மௌன ராகம் 2
முதல் பாகம் முடிய இரண்டாம் பாகத்தில் சின்ன குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்து இப்போது அதில் இருந்து கதை நகர்ந்து வருகிறது. ஸ்ருதி-சக்தி ஒரே வீட்டில் அண்ணன்-தம்பிகளை திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார்கள்.
இதில் ஸ்ருதியிடம் சிக்காமல் இருக்க மல்லிகா அவர் கண்ணில் படாமல் இருந்தார். ஆனால் சக்தியின் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியில் மல்லிகா-சக்தி இருவரும் ஸ்ருதியிடம் எதிர்ப்பாராத விதமாக சிக்கி கொள்கிறார்கள்.
அதிரடி புரொமோ
தற்போது வெளியாகியுள்ள புரொமோவில் மல்லிகா ஸ்ருதியிடம் இந்த உண்மையை யாரிடமும் கூற வேண்டாம் என கெஞ்சுகிறார். ஸ்ருதி உண்மையை யாரிடமும் கூறாமல் இருப்பாரா அல்லது அதை வைத்து அவர்களை பிளான் மெயில் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கோபியை மாட்டிவிட அவரது அப்பா எடுத்த அதிரடி முடிவு- இந்த முறை சிக்குவாரா?