20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி பட கூட்டணி.. வைரல் போட்டோ

Bhavya
in பிரபலங்கள்Report this article
எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த திரைப்படம் எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி. இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நதியா, அசின், பிரகாஷ் ராஜ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இப்படம் ஜெயம் ரவியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பதையும் வெற்றியையும் கொடுத்தது. இப்படம் வெளியாகி 20 வருடங்கள் முடிவடைந்த நிலையில் கடந்த 14ம் தேதி ரீ-ரிலீஸ் ஆனது.
வைரல் போட்டோ
இந்நிலையில், எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி படத்தின் கூட்டணி 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்துள்ளனர்.
இது தொடர்பாக, நடிகை நதியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் மோகன்ராஜ் மற்றும் ரவிமோகனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில்,"எனது திரைப் பயணத்திலேயே மைல் கல்லாக விளங்கும் படம் ரீ-ரிலீஸாகியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என தெரிவித்திருக்கிறார்.