தளபதி 67 படத்தில் பாடல்கள் இல்லையா ! இதுவரை தமிழில் சாங்ஸ் இல்லாமல் வெளியான முக்கிய திரைப்படங்கள்..
மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் அடுத்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார், அப்படத்தை தொடர்ந்து அவரின் 67-வது படத்திற்காக மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அப்படம் குறித்து கடந்த சில நாட்களாக பரவி வரும் தகவல் என்னவென்றால் அப்படத்தில் பாடல்கள் ஏதும் இருக்காது என கூறப்பட்டு வருகிறது.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்தில் எந்தஒரு பாடல்களும் கிடையாது, கதாநாயகியும் இல்லை.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் வெளியான முக்கிய திரைப்படங்களில் பாடல்கள் இல்லாமல் வெளியான திரைப்படங்கள் குறித்து தான் பார்க்கவுள்ளோம்.
பாடல்கள் இல்லாமல் வெளியான திரைப்படங்கள்
1. கைதி (2019)
2. Game Over (2019)
3. விசாரணை (2015)
4. நடுநிசி நாய்கள் (2011)
5. குருதிப்புனல் (1995)

அரபிக் குத்து பாடல் குறித்து தளபதி 66 இசையமைப்பாளர் சொன்ன விஷயம் !