உடல்நிலை பாதிக்கப்பட்ட மம்மூட்டி தற்போது எப்படி இருக்கிறார்? லேட்டஸ்ட் தகவல்
73 வயதானாலும் மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக தற்போதும் இருந்து வருபவர் மம்மூட்டி. அவர் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்ட்டு சிகிச்சை பெற்ற வருவதாக தகவல் வந்தது.
அவருக்கு கேன்சர் என செய்தி பரவ ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆனார்கள். ஆனால் அது உண்மை இல்லை என மம்மூட்டி தரப்பு விளக்கம் கொடுத்திருந்தது.
நண்பர் விளக்கம்
இந்நிலையில் மம்மூட்டியின் நண்பரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜான் பிரிட்டாஸ் என்பவர் தற்போது மம்மூட்டியின் உடல்நிலை பற்றி பேட்டி அளித்திருக்கிறார்.
"மம்மூட்டிக்கு உடலில் பிரச்சனை இருப்பது உண்மை தான். ஆனால் செய்திகளில் வருவது போல மோசமடையவில்லை."
"அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது குணமடைந்து வருகிறார். நான் போனில் பேசினேன்" என ஜான் பிரிட்டாஸ் கூறி இருக்கிறார்.

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
