Mr. and Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முதல் ஜோடி.. ஷாக்கான ரசிகர்கள்
Mr. and Mrs. சின்னத்திரை
விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று சீசன்களாக வெற்றிகண்ட நிகழ்ச்சியில் ஒன்று Mr. and Mrs. சின்னத்திரை. இதன் நான்காவது சீசன் தற்போது துவங்கியுள்ளது.
இதில் நடுவர்களாக கோபிநாத் மற்றும் நடிகை தேவதர்ஷினி இருக்கிறார்கள். அதேபோல், நம் அனைவருக்கும் பிடித்த மாகாபா ஆனந்த் மற்றும் அறந்தாங்கி நிஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி, மகாலிங்கம் - ராஜேஸ்வரி, சிங்கப்பூர் தீபன் - சுகன்யா, ரஹ்மான் - ஃபரிணா, மதன் - ரேஷ்மா, யோகி - சத்யா, பிரவீன் - ஐஸ்வர்யா, ராம் - ஜானு, ஸ்ரீகுமார் - அணிலா, வசந்தகுமார் - ரேகா என மொத்தம் 10 ஜோடிகள் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளார்கள்.
முதல் எலிமினேஷன்
இதில் கடந்த வாரம் எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. இந்த எலிமினேஷன் சுற்றில் சில காரணங்களால் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடி பங்குகொள்ளவில்லை.
இதனால், அவர்களே போட்டியில் இருந்து விலகி கொள்கிறோம் என்று கூறிவிட்டார்கள் என அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடியை நடுவர்கள் கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி ஒன்றாக முடிவெடுத்து, Mr. and Mrs. சின்னத்திரை சீசன் 4ன் முதல் ஏவிக்ஷன் செய்துள்ளனர்.

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
