Mr & Mrs சின்னத்திரை 4வது சீசன் தொடங்கியது- போட்டியாளர்கள் யார் யார்?
விஜய் தொலைக்காட்சி என்றாலே புதுவிதமான நிகழ்ச்சிகள் தான். அதில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சிகள் பல மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
அப்படி அதில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் பலவற்றை மீண்டும் ஒளிபரப்பினாலும் ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்கள்.
தற்போது ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் நிகழ்ச்சியின் 4வது சீசன் தொடங்கப்பட்டுள்ளது, என்ன சீசன் என்று பார்க்கிறீர்களா, Mr & Mrs சின்னத்திரை தான்.
இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
அதேபோல் இதில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் என்பது கொஞ்சம் கூட தெரியவில்லை, யார் யார் வருகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
இந்த 4வது சீசனையும் மாகாபா மற்றும் அர்ச்சனா சேர்ந்து தொகுத்து வழங்க இருக்கிறார்களாம்.
காமெடி நடிகர் சூரியின் சொந்த ஊரில் உள்ள வீட்டை பார்த்துள்ளீர்களா?