புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள Mr.Manaivi சீரியல் ஜோடி... தொடர் பெயர், நடிகர்கள் விவரம்
சன் டிவி
படங்கள் என்னடா, வாரா வாரம் தான் வரும் நாங்கள் அன்றாடம் என்டர்டெயின்மென்ட் கேட்கிறோம் என ரசிகர்கள் பலரும் இப்போது சீரியல்கள் பக்கம் தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
இதனால் தொலைக்காட்சிகளுக்குள் டிஆர்பியை பிடிக்க கடும் போட்டிகள் நடந்து வருகிறது. எந்த நேரத்தில் எந்த சீரியலை ஒளிபரப்பலாம், எது நன்றாக வரவேற்பு பெறுகிறது என தொடர்ந்து கவனித்து அதற்கான புரொமோ வேலைகள் என பார்த்து பார்த்து தொலைக்காட்சி வேலைகள் செய்கின்றன.

புதிய சீரியல்
இப்போது விஜய் டிவியில் பிக்பாஸ் 9 முடிவுக்கு வரப்போகிறது என்பதால் சுட்டும் விழி சுடரே, அழகே அழகு என நிறைய சீரியல்களை களமிறக்கி வருகிறார்கள். அதேபோல் சன் டிவி பக்கமும் பழைய தொடர்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு புதிய சீரியல்கள் களமிறங்கி வருகிறது.
அப்படி விரைவில் பராசக்தி என்ற தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.
பவன் மற்றும் டெப்செனி நடிக்கும் இந்த சீரியலில் வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் இதோ,