Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்.. பல லட்சத்தை தட்டி சென்ற ஒரே ஜோடி
Mr and Mrs சின்னத்திரை
விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும் Mr and Mrs சின்னத்திரை. இதனுடைய நான்காவது சீசன் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது.
நேற்று நடைபெற்ற இந்த பைனல் போட்டியில், ஒவ்வொரு ஜோடியும் கடுமையாகவே போட்டியிட்டனர்.
டைட்டில் வின்னர்
இந்த பைனல் போட்டியில் கடுமையாக போட்டியிட்ட Mr and Mrs சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகியுள்ளனர் மகாலிங்கம் - ராஜேஸ்வரி. அதுமட்டுமின்றி ரூ. 3 லட்சம் வெற்றி தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளது.
மஹாலிங்கம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர். அண்மையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற சோழா சோழா பாடலை கூட இவர் தான் பாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், மதன் - ரேஷ்மா ஜோடி இரண்டாவது இடத்தையும், ஃபரினா - ரஹ்மான் மற்றும் வசந்த் - ரேகா ஜோடிகள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நம்ம டிடி-யா இது! முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் உடையில் அவர் கொடுத்த போஸை பாருங்க

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
