Mr. Queen வெப் சீரிஸ் - சிறப்பு பார்வை
அமேசான்-ல் கொரியன் டிராமா குவிந்து இருக்கிறது, அந்த வகையில், தற்போது ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்து இழுத்த ஒரு சீரிஸ் மிஸ்டர் குயின். சரி, இந்த சீரிஸ் எப்படி இருக்கு பார்ப்போம்.
Mr. Queen கதை என்ன?
படத்தின் நாயகன் ஒரு Chef, அதே நேரத்தில் பொறுப்பே இல்லாமல், பார்ட்டி, பொண்ணுங்க என இருக்கும் கேரக்டர். இவர் ஒரு நாள் ஒரு பெரிய அதிகாரிக்கு சமைத்துக் கொடுத்ததில் மீன் தூண்டில் இருக்க, இவரை கைது செய்ய போலீஸ் வருகின்றது, அங்கிருந்து தப்பிக்க முற்படும் போது அவர் நீச்சல் குளத்தில் குதிக்க, அப்போது அவர் தலையில் அடிப்பட்டு எந்திரிக்கும் போது பல வருடம் பின்னோக்கி சென்று ராஜாக்கள் காலத்தில் எழுந்திருக்கிறார்.

அதுவும் அந்த ஊர் ராணியின் உடலில். இதென்னடா கொடுமை, நான் ஏன் இப்படி மாறினேன் என நினைக்கும் போதே ராணிக்கு இன்னும் இரண்டு நாளில் திருமணம் என சொல்ல, அட இதுவேறையா என நினைக்கும் போதே திருமணமும் முடிகிறது.

அதன் பிறகு அந்த ராஜாவுக்கும் இவருக்கும் நடக்கும் விஷயங்கள், ஹீரோ மறுபடியும் தன் காலத்திற்கே சென்றாரா, இவர் பழைய காலத்திற்கு வந்த நோக்கம் என்ன என்ற ஜாலியான பயணமே இந்த மிஸ்டர் குயின்.
சீரிஸ் எப்படி உள்ளது? சிறப்பு பார்வை
இந்த சீரிஸில் நடித்த எல்லோருமே சூப்பராக நடித்துள்ளனர். அதிலும் ராணியாக மாறிய பின் ஆண் குரல் மைண்ட் வாய்ஸ், பெண் குரலில் பேசுவது என ஹீரோயின் கதாபாத்திரம் செம.
அதே நேரத்தில் இவர் எப்படி மீண்டும் நிகழ்காலத்திற்கு வருவார் என்ற பதற்றம் கொஞ்சம் கூட இல்லை, அதுதான் இந்த சீரிஸின் மைனஸ்.
இதெல்லாம் விட 20 எபிசோட், ஒவ்வொரு எபிசோடும் 1 மணி நேரம் என ஒரே செட்டில் உட்கார்ந்து பார்க்க முடியாதபடி நீண்டுகொண்டே செல்கிறது. ஆனாலும் எங்கும் போரடிக்காமல் ஜாலியாக செல்வதால் கண்டிப்பாக இதை ஒரு முறை பார்க்கலாம்.