3 நாட்களில் Mr. X திரைப்படம் செய்துள்ள வசூல்... பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
Mr. X
ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும் போதும் அப்படத்தின் வசூல் விவரங்களை நாம் பார்ப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் வெளியான Mr. X திரைப்படத்தின் வசூல் விவரங்களைத்தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

FIR திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் மனு ஆனந்த். இவர் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகியுள்ள திரைப்படம்தான் Mr. X. இப்படத்தில் ஆர்யா, கவுதம் மேனன், மஞ்சு வாரியர், சரத்குமார் என பலரும் நடித்திருந்தனர்.

Spy த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடந்த வாரம் வெளிவந்த Mr. X திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால், கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
வசூல்
இந்த நிலையில், Mr. X திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 3 நாட்களில் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 4 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சொன்னதை செய்யாவிட்டால் ராஜினாமா செய்கிறேன்.., பத்திரத்தில் கையெழுத்திட்ட நாதக வேட்பாளர் IBC Tamilnadu
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu