சிம்புவை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகருடன் இணைந்த கவுதம் கார்த்திக்.. வெளிவந்த படத்தின் மோஷன் போஸ்டர்
கவுதம் கார்த்திக்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கவுதம் கார்த்திக். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஆகஸ்ட் 16 1947. இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
அதே போல் இப்படத்திற்கு முன் வெளிவந்த பத்து தல திரைப்படம் முதல் சில நாட்கள் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றாலும் பின் குறைய துவங்கிவிட்டது.
விமர்சனங்களும் இப்படத்திற்கு கலவையாக தான் வந்தது. பத்து தல படத்தின் மூலம் முதல் முறையாக சிம்புவுடன் இணைந்து கவுதம் கார்த்திக் நடித்திருந்தார்.
மிஸ்டர் எக்ஸ்
இந்நிலையில், தற்போது சிம்புவை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யாவுடன் இணைந்து மிஸ்டர் எக்ஸ் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை மனு ஆனந்த் இயக்கி வருகிறார். இவர் இதற்க்கு முன் விஷ்ணு விஷாலை வைத்து எஃப் ஐ ஆர் எனும் திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுதம் கார்த்திக் மற்றும் ஆர்யா முதல் முறையாக இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ பாருங்க..
சிறு வயது நந்தினியாக நடித்த நடிகை சாராவின் தந்தையும் ஒரு நடிகர் தானா.. இதோ பாருங்க

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
