ராஷ்மிகா இடத்தை பிடித்த மிருணாள் தாகூர்.. முதல் முறையாக அவர் செய்யப்போகும் விஷயம்
ராஷ்மிகா மந்தனா
இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடைசியாக வெளிவந்த தாமா படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அனிமல், புஷ்பா 2, சாவா என தொடர்ந்து வசூலில் சாதனை படைத்த படங்களில் நடித்து இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார். கதாநாயகியாக மட்டுமின்றி கதையின் நாயகியாக இவர் நடித்த The Girlfriend படமும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி திருமணம் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் அவர்கள் தரப்பில் இருந்து வெளிவரவில்லை.
சிறப்பு பாடல்
ராம் சரண் - ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகி வரும் படம் பெத்தி. இப்படத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட ராஷ்மிகா மந்தனாவை படக்குழு அணுகியுள்ளனர். ஆனால், அது நடக்கவில்லை.

இந்நிலையில், தற்போது அந்த சிறப்பு பாடலில் நடனமாட மிருணாள் தாகூர் சரியென கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்மிகாவுக்கு பதிலாக மிருணாள் கமிட்டாகியுள்ள நிலையில், அந்த பாடல் எப்படி வரப்போகிறது என்பதை காண ரசிகர்கள் தற்போதே ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

மேலும், சிறப்பு பாடலுக்கு மிருணாள் தாகூர் நடனமாடுவது இதுவே முதல் முறையாகும். பெத்தி படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. .