தனுஷ் - மிருணாள் தாகூர் திருமணமா? மிருணாள் தரப்பில் வெளிவந்த உண்மை
தனுஷ் - மிருணாள்
நடிகர் தனுஷ் - நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் சில வதந்திகள் பரவின. ஆனால், அது உண்மையில்லை என பின்பு தெரியவந்தது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தனுஷ் - மிருணாள் தாகூர் வருகிற பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக பாலிவுட் வட்டாரத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தி பேசினார்கள்.

ஆனால், தனுஷ் தரப்பில் இருந்தோ, அல்லது மிருணாள் தாகூர் தரப்பில் இருந்தோ எந்த ஒரு அறிவிப்பும் திருமணம் குறித்து வெளிவரவில்லை.
வெளிவந்த உண்மை
இந்த நிலையில், தனுஷுக்கும் மிருணாள் தாகூருக்கும் திருமணம் என பரவி வந்த தகவலை நடிகை மிருணாள் தாகூர் தரப்பில் இருந்து நிராகரித்துள்ளது. அது எதுவும் உண்மையான தகவல் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் தனுஷ் - மிருணாள் தாகூர் திருமணம் குறித்து வெளிவந்த தகவல்கள் அனைத்துமே வதந்தி என தெரியவந்துள்ளது.