அம்மா, அப்பா போட்ட அந்த கண்டிஷனால் பல படங்களை மிஸ் செய்தேன்.. மிருணாள் தாகூர் ஓபன் டாக்
மிருணாள் தாகூர்
மராத்தியில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான ஹலோ நந்தன் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மிருணாள் தாகூர்.
தொடர்ந்து அந்த மொழியிலேயே படங்கள் நடித்து வந்தவர் லவ் சோனியா, சூப்பர் 30 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தவர் தென்னிந்தியா பக்கம் வந்து சீதா ராமம் படத்தின் மூலம் முன்னணி நாயகியாக உயர்ந்தார்.
பெற்றோர் கண்டிஷன்
சமீபத்தில் ஒரு பேட்டியில் நிறைய ஹிட் படங்களை ஒரு காரணத்திற்காக மிஸ் செய்த விஷயம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், நான் சினிமா என்று முடிவு எடுத்ததுமே தனது பெற்றோர்கள் முத்தக் காட்சிகளிலும், ஆபாசமான காட்சிகளிலும் நடிக்கக் கூடாது என ஆரம்பத்தில் எனது அம்மா, அப்பா கண்டிஷன் போட்டார்கள்.
அதனாலேயே பல பட வாய்ப்புகளை இழந்தேன். ஒருகட்டத்தில் நாயகி ஆகும் கனவு இதனால் நிறைவேறாமல் போகுமோ என்ற அச்சத்தி பெற்றோர்களிடம் பேசி புரிய வைத்தேன் என கூறியுள்ளார்.
லவ் சோனியா படத்தில் படுக்கையற காட்சிகளில் அத்துமீறி மிருணாள் தாகூர் நடித்திருப்பார்.