தனுஷ் படத்தின் பார்ட்டியில் கலந்துகொண்ட மிருணாள் தாகூர்.. புகைப்படங்கள் இதோ
Tere Ishk Mein
இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் Tere Ishk Mein. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடித்துள்ளார்.
Raanjhanaa உலகத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
காதல் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 30ம் தேதி படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
இதனை தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். படப்பிடிப்பு நல்லபடியாக நிறைவுபெற்றதை தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர்.
பார்ட்டியில் மிருணாள் தாகூர்
நேற்று இரவு நடைபெற்ற இந்த பார்ட்டியில் நடிகை மிருணாள் தாகூர் கலந்துகொண்டுள்ளார். அப்போது அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..



