தலையில் ரத்தம் கொட்ட கொட்ட அடித்தான்- முன்னாள் கணவர் குறித்து சீரியல் நடிகை ஷாலினி
சீரியல் நடிகை ஷாலினி
முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி. அடுத்தடுத்து தொடர்ந்து சீரியல்கள் நடித்த இவர் சூப்பர் மாம் போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டு அசத்தியுள்ளார்.
அண்மையில் இவர் தனது கணவருடன் விவாகரத்து கிடைத்த சந்தோஷத்தில் போட்டோ ஷுட் நடத்தியிருந்தார்.
அந்த புகைப்படங்கள் வெளியாக மக்கள் கொஞ்சம் பரகாதலன் அமீருக்கு பிறந்தநாள், ரொமான்டிக் புகைப்படங்களுடன் வாழ்த்து கூறிய சீரியல் நடிகை பாவனி- செம வைரல் பரப்பாக பேசினார்கள். அண்மையில் ஒரு பேட்டியில் கணவர், விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.

கொடுமையான கணவர்
எனது முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை, திருமணம் ஆன ஒரு சில மாதத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தோம். பின் பெற்றோருடன் வசித்துக்கொண்டிருந்த போது ரியாசுடன் பழக்கம் ஏற்பட திருமணமும் செய்தோம்.
முதலில் அன்பாக பார்த்துக்கொண்ட அவர் சில நாட்களில் அடிக்க ஆரம்பித்தார். முதல் வாழ்க்கை போனது, இதையும் இழக்க கூடாது என பொருத்துக்கொண்டேன். குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் மது அருந்த சொல்வான்.

ஒருநாள் மது அருந்திவிட்டு தூங்கிவிட்டேன், அப்போது என் மேல் தண்ணியை ஊற்றி எழுப்பி நீ மட்டும் நல்லா தூங்குறியானு கேட்டு அடித்தான்.
அடிச்ச அடில என் தலையில் இருந்து ரத்தம் வந்துச்சு. ரத்தம் வந்தாலும் விடாம, ரத்தம் வர அளவுக்கு என்ன அடிக்க வெச்சிடியே டீனு சொல்லிட்டு மீண்டும் பயங்கரமா அடிப்பான்.
அவனைப்பார்த்த யாருமே நம்ப மாட்டாங்க அந்த அளவுக்கு நல்லவன் மாதிரி இருப்பான். தினமும் அடி வாங்கி கஷ்டப்பட்டதால் தான் விவாகரத்து போட்டோ ஷுட் நடத்தினேன் என நடிகை தெரிவித்துள்ளார்.

காதலன் அமீருக்கு பிறந்தநாள், ரொமான்டிக் புகைப்படங்களுடன் வாழ்த்து கூறிய சீரியல் நடிகை பாவனி- செம வைரல்
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu