சினிமாவில் இருந்து மொத்தமாக விலகியது ஏன்?- ஓபனாக கூறிய நடிகை மும்தாஜ்

By Yathrika Mar 08, 2024 11:12 AM GMT
Report

மும்தாஜ்

தமிழ் சினிமாவில் 1999ம் ஆண்டு வெளியான மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர் நடிகை மும்தாஜ்.

இந்த படத்தில் இடம்பெற்ற ஹலோ ஹலோ பாடல், காதல் தேடி என்ற பாடல்கள் எல்லாம் செம ஹிட்.

அப்படத்தை தொடர்ந்து விஜய்யின் குஷி திரைப்படத்தில் கட்டிப்பிடி கட்டிப்பிடிடா பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களின் கனவு கண்ணியாக மாறி இருந்தார்.

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்கிறாரா?- இதோ அதிரடியாக வந்த உண்மை

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்கிறாரா?- இதோ அதிரடியாக வந்த உண்மை

பின் மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாதன், லூட்டி, சொன்னால் தான் காதலா, வேதம், சாக்லெட் என்று பல திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

கவர்ச்சி நடிகையாக சினிமாவில் கலக்கிவந்த மும்தாஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2வது சீசனிலும் கலந்துகொண்டிருந்தார்.

சினிமாவில் இருந்து மொத்தமாக விலகியது ஏன்?- ஓபனாக கூறிய நடிகை மும்தாஜ் | Mumtaz About Why She Quit Cinema

விலகியது ஏன்

இவர் அண்மையில் ஒரு பேட்டியில், நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தேன், எனக்கு குர்ஆன் பற்றி நன்றாக தெரியும். அல்லாஹ் எனக்கு சில விஷயங்களை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் அதில் சொல்லப்பட்ட விஷயத்தின் அர்த்தம் தெரியாமலே இருந்தேன், ஆனால் ஒரு கட்டத்தில் அது புரிய ஆரம்பித்தபோது எனக்குள் ஒரு மாற்றம் தொடங்கியது.

அதன் காரணமாகவே தான் நான் சினிமாவில் இனி இருக்க மாட்டேன் என்று முடிவு எடுத்ததாக பேசியுள்ளார். 

சினிமாவில் இருந்து மொத்தமாக விலகியது ஏன்?- ஓபனாக கூறிய நடிகை மும்தாஜ் | Mumtaz About Why She Quit Cinema

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US